மக்களவை தேர்தல்: திடீர் பிரபலமான வாக்குச்சாவடி பெண் அதிகாரி - வைரல் Video!
வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வைரலானார்
மக்களவை தேர்தல்
தமிழகம், புதுச்சேரி மற்றும் உத்திர பிரதேசம் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச மாநிலத்தில் 8 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இதில் அம்மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் வாக்குச்சாவடி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ என்ற பெண் சமூக வலைத்தளங்களில் வைரலானார்.
வங்கி அதிகாரி
இவர் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு மேற்பார்வையிட்டு வீடியோவை பயனர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் அந்த பெண் திடீரென சமூக வலைத்தளங்கள் பிரபலமானார்.
இஷா அரோரோ அம்மாநிலத்தில் உள்ள மஹாங்கிர் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக பணிபுரிபவர் ஆவார். இவர் தனது விடா முயற்சியுடன் பணிபுரிந்ததற்காக பயனர்களால் பாராட்டப்பட்டார்.
Images of UP polling officer #IshaArora are widely circulating on various social media platforms. Her pictures, captured by media cameras in #Saharanpur with necessary election materials, have caught the public's eye.#viral #viralvideo pic.twitter.com/IqW3EQuuWz
— Madhuri Adnal (@madhuriadnal) April 19, 2024