மக்களவை தேர்தல்: 11 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - என்ன காரணம்?
11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல்
தமிழகம், புதுச்சேரி மற்றும் மணிப்பூர் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூர் மாநிலத்தின் 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது.
இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மறு வாக்குப்பதிவு
இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வாக்கு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.