மரணப்படுக்கையில் நடிகர் போண்டாமணி - மகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபலம்!
நடிகர் போண்டாமணி உடல்நலம் குன்றிய நிலையில் அவரது மகளின் படிப்பு செலவுகளை ஏற்றுக்கொள்வதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
காமடி நடிகர்
பிரபல காமெடி நடிகரான போண்டாமணி 90 களில் இருந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.இவர் "சுந்தரா ட்ராவெல்ஸ், மருதமலை போன்ற 90s படங்கள் முதல் ஜில்லா போன்ற படங்களில் காமெடி ரோலில் நடித்து பிரபலமானவர்.
இவர், சமீபத்தில் தனது இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.
அப்பொழுது இவர் சிகிச்சைகாக பணமின்றி தவிப்பதாக கூறி வீடியோ ஒன்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதனால், பல பிரபலங்கள் இவருக்கு உதவி செய்தனர், அதனால் சிகிச்சை நல்ல முறையில் நடந்து தான் மீண்டு வந்ததாகவும் உதவினவர்களை லிஸ்ட் போட்டு நன்றி கூறி ஒரு யூட்யூப் சேனலில் தெரிவித்தார்.
மகள் தேர்ச்சி
இந்நிலையில், இவரது மகள் +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் 600க்கு 400 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவரின் கல்லூரி செலவுக்கு பணம் பற்றாக்குறையாக இருந்ததாக கூறியதும். பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவரது மகளின் படிப்பு செலவு அனைத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியானதும் அவரது வேல்ஸ் கல்லூரியில் தனது மகளுக்கு B.sc படிக்க சீட் கொடுத்ததாக கூறினார்.
தொடர்ந்து அவரை பற்றி போண்டாமணி, " அவர் ஒரு நல்ல மனிதர், தெய்வத்திற்கு சமம், இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்" என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.