பும்ராவை குரங்குடன் ஒப்பிட்டு பேசிய வீராங்கனை; கொதிக்கும் இந்தியா ரசிகர்கள் - நடந்தது என்ன?
வர்ணனையின் போது பும்ராவை குரங்குடன் ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் தொடர்
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அணியும், அடிலெய்ட்டில் நடைபெற்ற 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது.
பும்ரா
3வது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ஆடி 445 ரன்களை குவித்தது. டிராவிஸ் ஹெட்(152) மற்றும் ஸ்டீவ் ஸ்மித்(101) இருவரும் சதமடித்தனர்.
இந்தியா தரப்பில், பும்ரா 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி, 51 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ மற்றும் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஈஷா குகாவும் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பும்ராவை பாராட்டி பேசிய பிரெட் லீ, Most valuable player என்று கூறினார்.
ஈஷா குகா
அதை தொடர்ந்து ஈஷா குகாவும் பும்ராவை பாராட்டுவாதாக நினைத்து most valuable Primate (மிகவும் மதிப்புமிக்க பிரைமேட்) என்று கூறினார். பிரைமட் என்றால் குரங்கு இனத்தை சேர்ந்த ஒரு உயிரினத்தை குறிக்கும்.
ஈஷா குகா கூறியது இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராட்ட எத்தனையோ வார்த்தைகள் இருக்கும் போது ஈஷா குகா இந்த வார்த்தையை பயன்படுத்தியது உள் நோக்கத்தோடு கூறியதாகவே தெரிகிறது.
மன்னிப்பு
இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை பொறுத்துக்கொள்ளலா முடியாமல் இவ்வாறு பேசுகின்றனர். ஈஷாகுகா வர்ணனை செய்ய தடை விதிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
இதனையடுத்து 3வது நாள் போட்டி தொடங்கும் போது தான் கூறிய கருத்திற்கு ஈஷா குகா மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், "நான் பும்ராவின் சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சித்தேன்.
அதற்காக நான் தவறான வார்த்தையை தேர்ந்து எடுத்துள்ளேன்.இதில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த உள்நோக்கத்துடனும் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை" என தெரிவித்துள்ளார்.