கோவையில் மக்களவை தேர்தலில் போட்டியா..? வானதி ஸ்ரீனிவாசன் பரபரப்பு பேட்டி
மக்களவை தேர்தல் குறித்து மும்முரமாக அனைத்து கட்சிகளும் பணியாற்றி வருகின்றது.
மக்களவை தேர்தல்
10 ஆண்டுகால ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது பாஜக.
மோடியை மீண்டும் பிரதமராக முன்னிருந்து தேர்தலை சந்திக்க ஆயுதமாக்கி வரும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பேசும் போது, வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் புதிய பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கோவையில் போட்டி
மேலும், அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து வினவிய போது, அவர் போட்டியிட்டால் சந்தோசம் தான் என கூறி, தலைமை எடுக்கும் முடிவிற்கு தங்கள் செயல்படுத்துவோம் என்று கூறினார்.
நீங்கள் மக்களவை தேர்தலில் போட்டியிடுவீர்களா..? என்று வினவப்பட்ட போது, தலைமை அறிவுறுத்தினால் கோவையில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்து சென்றார்.