மீண்டும் வாரணாசியில் மோடி...அமித் ஷா - ஜெய்சங்கர் எங்கு போட்டியிடுகிறார்கள் தெரியுமா..?
மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல்
மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் முனைப்பில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவின் முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 195 பேர் போட்டியிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மோடிக்கு இருமுறை வெற்றியை பெற்றுக்கொடுத்த வாரணாசி தொகுதியிலேயே அவர் மீண்டும் களம் காணுகிறார். தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்த நிலையில், அவை பொய்யாக போனது.
அதே போல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் லக்னோ தொகுதியிலும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, போர்பந்தர் தொகுதியிலும் களமிறங்குகின்றனர்.
மலையாள நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே நேற்று வெளியிட்டார்.இது குறிப்பிடத்தக்க விஷயமென்னவென்றால், 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில்,50 வயதுக்கு உட்பட்ட 47 பேருக்கும், 28 பெண்கள், இளைஞர்கள் 47, பட்டியலினத்தவர் 27, பழங்குடியினர் 19, ஓபிசி பிரிவினர் 57 பேர் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட பட்டியலில் தமிழகத்தில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற தகவல் இடம்பெறவில்லை.