25 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக..நேரடி போட்டி..? நயினார் நாகேந்திரன் உறுதி..!
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்திலே25 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தீவிரம்
வரும் மக்களவை தேர்தலுக்காக பாஜக மும்முரமாக தயாராகி வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கணிசமான கவனத்தை பெற்ற கட்சியாகவே தேர்தல் களம் காணுகிறது பாஜக.
திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல், மற்ற பிற கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தல் களம் காணும் பாஜக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்திடவில்லை.
25 தொகுதிகளில்....
வரும் மக்களவை தேர்தல் குறித்து பேசிய அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் 25 தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடும் என்று தெரிவித்து, நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயமாக ஏற்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் நெல்லை பகுதியில் கட்சி சார்பின்றி தனித்துவமாகவே சக்திவாய்ந்த நபராகவே கருதுபடுகிறார். அவர் வரும் தேர்தலில் நிச்சயமாக களமிறக்கப்படுவார் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.