திமுக, அதிமுகவிற்கு இனி "தமுக" தான் போட்டி..! தளபதி விஜய் கட்சியின் பெயர்,கொடி இது தானா..?
தீவிர அரசியலில் கால் பாதிக்க காத்திருக்கும் நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
விஜய்
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம், பெரிய சம்பளம், மாபெரும் ரசிகர் பட்டாளம் என பல இருக்கும் நிலையில், விஜய் நீண்ட காலமாகவே அரசியல் நோக்கி நகர்ந்து வருகின்றார்.
சமீப வருடங்களாக விஜய்யின் அரசியல் பணிகள் தீவிரமடைந்து வரும் சூழலில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு விஜய், கட்சி துவங்கி தேர்தல் களத்தில் இறங்குவர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமுக
தனது அமைப்பின் நிர்வாகிகள் பலர் டெல்லி சென்று பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகாரபூர்வகமாக கட்சியை பதிவு செய்வார்கள் என்றும் சென்ற வாரம் தகவல் வெளியாகியிருக்கின்றது.
இந்நிலையில், அவரின் கட்சிக்கு "தமிழக முன்னேற்ற கட்சி" அதாவது தமுக என பெயரிடப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும், இந்த செய்தி பெரும் வைரலாகி வருகின்றது. ஆனால், கட்சி கொடி குறித்து எந்த தகவலும் இல்லை.