ராமர் கோவில் திறப்பு விழா - பங்கேற்கும் சோனியா..? காங்கிரஸ் எடுக்கும் முக்கிய முடிவு..?
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் சோனியாகாந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமர் கோவில்
திறப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கோயில் திறப்பு விழாவில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போன்ற எதிர்க்கட்சியை சார்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதில் சோனியா காந்தி கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு காங்கிரஸ் சார்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அல்லது கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்திருந்தார்.
கலந்து கொள்கிறாரா சோனியா..?
இச்சூழலில் தான், ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால் இதை வைத்து பாஜக அரசியல் செய்யும் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுவதாக கூறப்படும் நிலையில், ஆகையால் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் முடிவை சோனியா காந்தி எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ராமர் கோவில் திறப்பு விழாவில், அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்கள், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி, மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்ஷய் குமார் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.