திருமணமான ஒரே வாரத்தில் ரஜினி பட நடிகை கர்ப்பம்?

Bollywood Sonakshi Sinha Tamil Actress
By Karthikraja Jun 29, 2024 03:30 PM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

 பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

சோனாக்ஷி சின்கா

சோனாக்ஷி சின்கா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்காவின் மகள் ஆவார். 

Sonakshi Sinha marriage

ஜாகிர் இக்பால் என்பவருடன் 7 வருடங்களாக டேட்டிங் செய்த சோனாக்ஷி சின்கா ஜூன் 23ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்? அந்த ஆசையெல்லாம் இருக்கு - மஞ்சிமா மோகன் பளீச்!

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்? அந்த ஆசையெல்லாம் இருக்கு - மஞ்சிமா மோகன் பளீச்!

மருத்துவமனை

இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இருந்து சோனாக்ஷி சின்கா தனது கணவருடன் காரில் வெளியேறும் வீடியோ வைரலாகி வருகிறது. அவர் எதற்காக மருத்துவமனை சென்றார் என தெரியாத நிலையில் , சோனாக்ஷி சின்கா கர்ப்பமாக உள்ளாரா என ரசிகர்கள் அந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

கர்ப்பமான பின்பு திருமணம் செய்து கொள்வது பாலிவுட் திரை உலகில் சகஜமாகி வருகிறது. ஆனால் இது குறித்து சோனாக்ஷி சின்ஹா எந்தவித விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.