திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்? அந்த ஆசையெல்லாம் இருக்கு - மஞ்சிமா மோகன் பளீச்!
தனது திருமணம் தொடர்பாக பரவிய தவறான தகவல்கள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் பேசியுள்ளார்.
மஞ்சிமா மோகன்
அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தொடர்ந்து சத்ரியன், இப்படி வெல்லும், தேவராட்டம், காலத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். மஞ்சிமா மோகன் கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனது திருமணம் தொடர்பாக பரவிய தவறான தகவல்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் "என்னுடைய திருமணம் தொடர்பான தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
வேதனை
திருமணத்துக்கு முன் நான் கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை என்றும் பல பொய்யான தகவல்கள் பரவின. எல்லாம் ஜோடிக்கப்பட்ட பொய்கள். இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை.
நான் கௌதமுக்கு ஏற்ற ஜோடியில்லை என்ற கமென்ட்ஸ்களை பார்க்கும்போது வலிக்கும். சமூகவலைதளங்களில் தம்பதியினர் தங்கள் திருமண புகைப்படங்களை பதிவிடுவதைப் பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்று தோன்றும்.
எங்கள் திருமண அறிவிப்பு வெளியான பிறகு எல்லாமே சோஷியல் மீடியாவாகிவிட்டது. நான் இப்போது பேசும்போது மிகவும் கவனமாக இருக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நாம் பேசவில்லை என்றால் அதை வைத்தே நம்மை மதிப்பிடுவார்கள்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.