ராகுல் காந்தி போதையில் நடாளுமன்றம் வருகிறாரா? இது நல்லதல்ல - கங்கனா சர்ச்சை பேச்சு!
ராகுல் காந்தி போதையில் நடாளுமன்றம் வருகிறாரா கங்கனா ரணாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது நல்லதல்ல..
ராகுல் காந்தி 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், பாஜகவின் சக்கரவியூகத்தை உடைத்து எறியும் காலம் விரைவில் வரும் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு பாஜக தரப்பு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது.
அந்த வகையில், நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், ராகுல் காந்தி பேசிய சர்ச்சை கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "ராகுல் பற்றி என்ன சொல்வது? அவர் பேசிய பேச்சுக்களில் எந்த அர்த்தமும் இல்லை.
கங்கனா சர்ச்சை
ராகுல் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது நாட்டுக்கு நல்லதல்ல. காங்கிரஸ் குறித்து எம்.பி., அனுராக் தாகூர் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நாட்டை பிளவுபடுத்தி, அதன்மூலம் பலனடைய காங்கிரஸ் முயற்சிக்கிறது. இது இப்போது நடப்பதல்ல.
நேரு பிரதமராக இருந்த போதில் இருந்தே, இந்த வேலையைத் தான் காங்கிரஸ் செய்து வருகிறது. மக்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பற்றி ராகுல் காந்தி பேசுவது தவறான முன் உதாரணமாகும்.
அவர், இவ்வாறு பேசுவதை பார்க்கையில் நாடாளுமன்றம் வரும் போது மது அல்லது போதை பொருளை ராகுல் காந்தி பயன்படுத்தினாரா என்று சோதனை செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.