கங்கனா மாட்டிறைச்சி சாப்பிடுவார்..ஆனால் பாஜக வேட்பாளர்- காங்கிரஸ் தலைவர் சர்ச்சை!
மாட்டிறைச்சி சாப்பிட்ட கங்கனா ரனாவத்தை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கங்கனா மாட்டிறைச்சி
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தை, விரைவில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியின் வேட்பாளராக அண்மையில், அக்கட்சி அறிவித்தது.
கங்கனா ரனாவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிமிடங்களில் இருந்துஅவரை குறித்து அடுக்கு அடுக்காய் சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. முன்னதாக, காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட், எக்ஸ் தளத்தில் கங்கனா குறித்து அவதூறு கருத்து பதிவிட்டார். இது கடும் விவாதத்துக்கு உள்ளாகியது.
காங்கிரஸ் தலைவர்
பின்னர், தனது வலைதள கணக்கு பலரால் பயன்படுத்தப்படுகிறது என விளக்கம் அளித்தார். இருப்பினும் சுப்ரியா ஸ்ரீனேட் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சினை சற்று ஓய்ந்த உடனே, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத், இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என கூறியது ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விஜய் வடேட்டிவார் பேசுகையில், “கங்கனா ரனாவத் ஒருமுறை ட்விட்டரில் (இப்போது எக்ஸ்) மாட்டிறைச்சியை விரும்புவதாகவும், சாப்பிட்டதாகவும் பகிர்ந்திருந்தார். பாஜக இப்போது அவருக்கு மக்களவைத் தேர்தலுக்கான டிக்கெட்டை வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். ,