பாகிஸ்தானுக்கு எதிராக காவி படையாக மாறப்போகும் இந்தியா!! BCCI அதிரடி முடிவு
நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காவி உடையில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி
இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் காலத்தில் இருந்தே நீல நிற ஜெர்சியை தான் அணிந்து வருகிறது. தற்போது ஐசிசி உலக கோப்பை 2023ம் ஆண்டுக்கான தொடரில் வீரர்கள்பயிற்சி செய்வதற்காக நீல நிறத்தில் ஒரு ஜெர்சி பயன்படுத்தப்பட்டு இருந்தது.
அதனை திடீரென்று தற்போது முழுமையாக காவி நிறத்திற்கு பிசிசிஐ மாற்றி இருக்கிறது.
காவி ஜெர்சி
இந்த புதிய காவி ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் இன்று பயிற்சி செய்வதற்காக சென்னை வந்தனர். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பிரத்தேயக ஜெர்சி என்று பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மட்டும் காவி நிற தொப்பிக்கு பதில் நீல நிற தொப்பியை அணிந்து பயிற்சியை மேற்கொண்டார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலவிதமான கருத்துக்களை பெற்றது.
பாகிஸ்தான் போட்டி
இந்நிலையில் வரும் 14-ம் தேதி அகமதபாத்தில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி காவி நிற ஜெர்சியில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனை பிசிசிஐ கவுரவ பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல் என குறிப்பிட்டு, ஒருவரின் கற்பனையில் உருவான தகவல் என தெரிவித்து வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.