கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்..வைரலாகும் பதிவு - உண்மை என்ன?
கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து கே.எல் ராகுல் விலகப் போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
கே.எல் ராகுல்..
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியவர் தற்போது மிடில் ஆர்டர் வரிசைக்கு பின்தள்ளப் பட்டுள்ளார் கே எல் ராகுல். குறிப்பாக டி 20 போட்டிகளில் அவர் அணியில் எடுக்கப்படுவது இல்லை.
அன்மை காலமாகவே அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்று பலர் அவர்களது விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். இதனால் கடும் அதிருப்தியை சந்தித்து வந்த கே எல் ராகுல் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

பாதியில் கழட்டிவிட்டப்பட்ட கே.எல்.ராகுல்? 3-வது போட்டியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் - குழப்பும் கம்பீர்
இன்ஸ்டா பதிவு
அதில், "நான் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். காத்திருங்கள்" எனக் குறிப்பிட்டு இருந்தார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவர் என்ன சொல்லப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பெரும் பேசுப்பொருளாக மாறியது.
இதனிடையே சில விஷமிகள் கே எல் ராகுல் வெளியிட்டது போன்ற ஒரு பதிவை வெளியிட்டனர். அதில் கே எல் ராகுல் தனது ஓய்வு அறிவிப்பை பற்றி பகிர்வது போன்ற வாசகங்களை இடம் பெறச் செய்தனர். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கே எல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாரா?
என அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த பதிவு உண்மை இல்லை, வேறு ஒரு வீரர் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பின் பதிவை அப்படியே எடுத்துக் கொண்டு, அந்த வீரரின் பெயரை மாற்றி கே எல் ராகுல் பெயர் மற்றும் புகைப்படத்தை இடம் பெறச் செய்துள்ளனர். என தெரியவந்துள்ளது.

viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan
