மறைந்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் - காட்டுத்தீ போல் பரவும் செய்தி?
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மரணித்ததாக தகவல் வெளிவருகின்றன.
அமெரிக்கா அதிபர்
உலக நாடுகளில் அறியப்படும் நபராக மாறுகிறார்கள் அமெரிக்கா அதிபர் ஆகும் நபர்கள். கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் அதிபராக இருந்து வருகிறார் ஜோ பைடன். அவரின் பார்த்து டக்கென அடையாளம் கண்டு கொள்பவர்களை தாண்டி, அவரின் பெயர் அறிந்தவர்களே உலகில் அதிகம்.
இந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்கா அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ப். அவர் கடுமையான போட்டியை ஜோ பைடனுக்கு அளித்து வந்தார். நேரடி விவாதத்தில் பைடனை திணறடித்து தன்னுடைய பெயரை உயர பறக்க வைத்த டிரம்ப், பொதுக்கூட்டத்தில் துப்பாக்கி சூட்டில் சிக்கி, தற்போது மக்களின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார்.
பைடனை மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் கட்சிக்குள்ளேயே எழுந்த நிலையில், தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸின் பெயரை முன்மொழிந்து, வேட்பாளராக இருந்து பின்வாங்கிவிட்டார் பைடன்.
மரணமா?
அதே போல, அவருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் தான் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது, ஜோ பைடன் இறந்து விட்டது ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியுள்ளது. பிரபல குத்துச்சண்டை வீரரான ரியான் கார்சியா(Ryan Garcia) தவறான ட்வீட் மற்றும் பல்வேறு ஆன்லைன் வீடியோக்கள் இந்த செய்தியை அதிகரிக்க உந்துதலாக இருந்துள்ளது.
ஆனால், இது உண்மையல்ல. வெறும் வதந்தியே. இந்த செய்தியை உறுதிப்படுத்தும் தகவல் எதுவுமே தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை என்பதே இதில் முக்கியமானதாகும்.