ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க திட்டமா..? வலுக்கும் கேள்விகள்!

Tamil nadu AIADMK BJP O. Panneerselvam
By Sumathi Jul 03, 2022 12:06 AM GMT
Report

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான திரெளபதி முர்மு, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோருவதற்காக சென்னை வந்திருந்தார்.

 திரெளபதி முர்மு

திரெளபதி முர்முக்கு ஆதரவு தெரிவி்க்கும் நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரெளபதி முர்மு வீற்றிருக்க, அவருக்கு பக்கத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

admk

அவருக்கு அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன். பாஜக எம்எல்ஏக்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

அதிமுக

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர் ஒன்றாக சங்கமித்த இந்த நிகழ்ச்சியின் மேடையை ஓபிஎஸ், இபிஎஸ்ஸுடன் பகிர்ந்து கொள்ளாமல்.

ops

ஏதோ திருமண வரவேற்பு நிகழ்ச்சி போல, முர்முவை அவர் தனியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தது ஏன் என்பதே தமிழக அரசியலில் இப்போதைய கேள்வி. ஒரு பிரதான கட்சியின் இரு தலைவர்களுக்கு இடையே மனவருத்தங்கள்,

இரண்டு அணி

கருத்து வேறுபாடுகள் இருந்து வரும்போது அவர்களை சமாதப்படுத்த பாஜக ஏன் முயலவில்லை என்ற துணைக் கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான ஆவின் வைத்தியநாதனிடம் கேட்டபோது, அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்துவிட்டது.

ஆணவத்தின் உச்சத்தில் இருக்கும், எம்ஜிஆரை விட தன்னை பெரிய ஆளாக நினைத்து கொண்டிருக்கும் இபிஎஸ்ஸுடன், ஓபிஎஸ் இனி எந்த மேடையையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.

 வைத்தியநாதன்

மகாபாரத்தில் பாண்டவர்கள் ஐந்து பேர்தான். ஆனால் கௌரவர்களை எதிர்த்து இறுதியில் பஞ்சபாண்டவர்கள்தான் வெற்றி பெற்றனர். அதேபோன்று தான் தற்போது கௌரவர்களான இபிஎஸ் அணியும், பாண்டவர்களான ஓபிஎஸ் அணியிடம் வீழும்.

அப்போது தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இபிஎஸ்தான் ஏற்படுமே தவிர, ஓபிஎஸ் தனிக் கட்சி தொடங்க வேண்டிய அவசியம் ஒருபோதும் வராது. ஊர் ரெண்டு பட்டால் யாருக்கோ மகிழ்ச்சி என்பது போல,

இபிஎஸ் -ஓபிஎஸ் இடையேயான சண்டையால் அதிமுக பலவீனப்படுவதை பாஜகவும், திமுகவும் விரும்பும். எனவே, பாஜகவினர் அதிமுக தலைவர்களை சமாதானப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று ஆவின் வைத்தியநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார். 

ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!