சென்னையில் திரௌபதி முர்மு, ஆதரவு கொடுத்த ஈபிஎஸ் , காத்திருந்த ஓபிஎஸ்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னைக்கு வருகை தந்தார்.
அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரௌபதி முர்மு ஆதரவு கோருகிறார். முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருந்தனர்.
சென்னை வந்த திரவுபதி முர்மு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக எம்.எல்.ஏக்கள், தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடந்த நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களை திரெளபதி முர்மு சந்தித்து வருகிறார். சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.
காத்திருந்த ஓபிஎஸ்
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி : குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்முவை அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் .
நேற்றே அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்புவிடுத்திருந்த நிலையில் தற்பொழுது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு இபிஎஸ் மட்டும் அவரது ஆதரவாளர்கள் உடன் வந்துள்ளார். ஓபிஎஸ் காத்திருந்து தனியாக தனது ஆதரவாளர்களுடன் சந்தித்தார்.
நகமும் சதையும் போல் ஒபிஎஸ் ஈபிஎஸ் உள்ளனர் : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்