IndvsEng - இங்கிலாந்து வெற்றி - விதிமீறலா..?எதுவும் சொல்லாத நடுவர்கள்..? குற்றம்சாட்டும் ரசிகர்கள்..!

Cricket Indian Cricket Team England Cricket Team
By Karthick Jan 30, 2024 05:39 AM GMT
Report

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தோல்வி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 201 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்திய அணியின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

is-india-has-been-cheated-due-to-low-light-test

கேப்டன் ரோகித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் யாருமே 30 ரன்களை கூட எட்டவில்லை. இந்நிலையில், தான் போட்டியில் விதிமீறல் ஒன்று நடைபெற்றது என இந்திய அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.

விராட் வந்ததும் நீங்க கிளம்புங்க - டெஸ்ட் ஆடுனது போதும் - இளம் வீரரை வறுக்கும் ரசிகர்கள்..!

விராட் வந்ததும் நீங்க கிளம்புங்க - டெஸ்ட் ஆடுனது போதும் - இளம் வீரரை வறுக்கும் ரசிகர்கள்..!

வீதிமீறல்

ரசிகர்களின் கருத்துப்படி, 4-வது நாள் ஆட்டத்தில் நேரம் முடிவடைந்த பிறகும் பந்து வீசப்பட்டுள்ளது. இந்திய அணியின் கைவசம் அப்போது வெறும் ஒரு விக்கெட் தான் இருந்தது. ஒரு விக்கெட் மட்டுமே என்பதால் கூடுதலாக விதிப்படி அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

is-india-has-been-cheated-due-to-low-light-test

4:30 மணிக்கு மேல் போட்டி நடைபெறும் போது பட்சத்தில் மைதானத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கக்கூடும். அப்போது எந்த அணியும் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தமாட்டார்கள் என்ற எழுதப்படாத விதி ஒன்று கிரிக்கெட் உலகில் உள்ளது.

is-india-has-been-cheated-due-to-low-light-test

வெளிச்சம் அதிகமாக இல்லாத சமயங்களில் பந்து வேகமாக வந்தால் அது பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனையாக முடியலாம் என்பதால் அணிகள் இதனை தவிர்த்து வருகின்றன. ஆனால், கூடுதல் நேரத்தில், மார்க் வுட் பந்துவீசினார். இது விதிமீறல் தானே என்று தற்போது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட துவங்கிவிட்டனர்.