எலான் மஸ்க்கும் இத்தாலி பிரதமர் மெலோனியும் டேட்டிங்? வைரலாகும் படம்..

Elon Musk World Social Media Giorgia Meloni
By Swetha Sep 28, 2024 04:04 AM GMT
Report

எலான் மஸ்க்கும் இத்தாலி பிரதமர் மெலோனியும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டு வருகிறது.

மஸ்க் - மெலோனி

நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க்விருது வழங்கி பாராட்டி பேசியுள்ளார்.

எலான் மஸ்க்கும் இத்தாலி பிரதமர் மெலோனியும் டேட்டிங்? வைரலாகும் படம்.. | Is Elon Musk Dating Italian Pm Meloni Viral Pics

அப்போது அவர், வெளிப்புறத்தை விட உள்ளுக்குக்குள் அதிக அழகாக இருக்கும் ஒருவருக்கு, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி.

மெலோனி உண்மையான நேர்மையான ஒருவர் என்று மஸ்க் அந்த விழாவில் மெலோனியை புகழ்ந்து பேசியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இதை மட்டும் செய்தால் ரஷ்ய அதிபர் படுகொலை செய்யப்படுவார் - பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!

இதை மட்டும் செய்தால் ரஷ்ய அதிபர் படுகொலை செய்யப்படுவார் - பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!

டேட்டிங்? 

இந்த நிலையில், பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

எலான் மஸ்க்கும் இத்தாலி பிரதமர் மெலோனியும் டேட்டிங்? வைரலாகும் படம்.. | Is Elon Musk Dating Italian Pm Meloni Viral Pics

அவர் மெலோனியை புகழும் வீடியோவையும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இப்படி தீயாய் பரவி வரும் கருத்தை எலான் மஸ்க் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.