லியோவின் அரசியல்..விஜயயை நிர்பந்திக்கிறதா திமுக..? பிரபலத்தின் ட்வீட்டால் பரபரப்பு
நடிகர் விஜய்யின் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் தயாராகியுள்ள லியோ படத்தின் ஆடியோ லான்ச் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
லியோ
நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின் போன்றோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் "லியோ". மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 19-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளை தற்போது படக்குழுவினர் துவங்கியுள்ளனர். தினமும் ஒரு போஸ்டர் என அதிரடி காட்டி வரும் படக்குழு படத்தின் இசை வெளியிட்டு விழாவை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிக்கு சிக்கலா..?
நடிகர் விஜய் விரைவில் கட்சி துவங்கி, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார் என கூறப்படும் நிலையில், அவருக்கு அரசியல் நெருக்கடி வழங்கப்படுவதாக கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், விஜய்யின் லியோ பட விநியோகத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேட்டு நிர்பந்திக்கும் சூழலில் தான் தற்போது வரை ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Breaking @splextamil pic.twitter.com/hF7AbDn43s
— Savukku Shankar (@SavukkuOfficial) September 23, 2023
ஆனால், இந்த தகவலை லியோ பட தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் நிறுவனம் முற்றிலுமாக உடனே மறுத்துள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில், இது போன்ற செய்திகள் பட குறித்து பரபரப்பை ஏற்படுத்தி எதிர்பார்ப்பபை அதிகரிக்க செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Sir, this is to clarify that this news is not true.. https://t.co/3qF7hBiviQ
— Seven Screen Studio (@7screenstudio) September 23, 2023