அமைச்சர் அன்பில் காருக்காகத்தான் ஆம்புலன்ஸ் நிறுத்தமா? விளக்கமளித்த ஆட்சியர்!
அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனம் பயணிப்பதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
அன்பில் மகேஷ்
திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடக்கரையில் அமைச்சர் ஆய்வின்போது, எதிரே வந்த ஆம்புலன்ஸ் ஒன்று போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் அமைச்சர் கார், வாகனங்கள் சென்ற பிறகே ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியானது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆய்வுப் பணி
அதில், கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையும் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
கடந்த 5ம் தேதி மட்டும் கல்லணை முதல் அணைக்கரை மதகுசாலை வரை கொள்ளிடம் ஆற்றின் கரையில் பயணம் செய்து மக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆட்சியர் விளக்கம்
பின்னர் தஞ்சாவூர் மாவட்டம், அணைகக்ரை ஆய்வு மாளிகையில் அரசு அலுவலர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்தரினால் அணைக்கரை பாலம் வழியாக ஆய்வு மாளிகைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அணைகக்ரை பாலத்தின் பாலம் என்பது ஒரு வழியாக மட்டுமே செல்லக்கூடிய பாலம் என கூறியுள்ள தஞ்சை மாவட்ட ஆட்சியர், ஒரு வழியாக வாகனங்கள் வந்தால் மறுபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும்.
மறுபுறத்தில் வாகனங்களை அனுமதிக்கும்போது அந்த பக்கத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும் என விளக்கமளித்துள்ளார்.