தனித்து விடப்படுகிறதா அதிமுக..? இஜபு கட்சியுடன் பேச்சுவார்த்தை - களம் என்ன சொல்கிறது..!
வரும் மக்களவை தேர்தல் அதிமுகவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
அதிமுக
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, பெரும் சிக்கலை வரும் மக்களவை தேர்தலில் சந்திக்க இருக்கிறது. தங்கள் தலைமையில் மிக பெரிய வெற்றி கூட்டணி உருவாகும் என அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வரும் நிலையில்,
பிரதான கூட்டணி கட்சிகள் எதுவும் தற்போது வரை கூட்டணியில் இணையவில்லை.
ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்ற சூழலில், இன்னும் அதிமுக கூட்டணியே உறுதிப்படுத்திடவில்லை என்பதே நிதர்சனம். பாமக பாஜகவின் கூட்டணியில் தான் இடம் பெரும் என பெரும்பாலான செய்திகள் குறிப்பிடும் நிலையில், தேமுதிக முடிவு இறுதி கட்டத்தை எட்டிடவில்லை.
இந்த சூழலில் தான் நேற்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலி கான், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதிலும் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.
அதிமுக ஒதுக்கிய தொகுதியில் போட்டியிட்ட பாஜக, தற்போது தனி கூட்டணியை அமைத்து வரும் சூழலில், தனித்து விடப்படுகிறதா..? அதிமுக என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.