தமிழகத்தை நெருக்குகிறதா புதிய புயல்? - உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

Tamil nadu TN Weather Weather
By Thahir May 08, 2023 07:18 AM GMT
Report

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி 

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

Is a new storm approaching Tamil Nadu?

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரம் அடைந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன் பின் இன்னும் தீவிரமடைந்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக மாறும் என சொல்லப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி புயலாக வலுப்பெற கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு பாதிப்பா? 

இந்த புயலானது வடக்கு வடமேற்கு திசையில நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதிக்கு வந்து அதன் பிறகு மீண்டும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரும் பங்களாதேஷ், மியான்மர், கடற்பகுதிகளை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Is a new storm approaching Tamil Nadu?

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக 10 ஆம் தேதி மாற உள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனவே இந்த புயலானது தமிழகத்தை நோக்கி நகராது என்றும் இதன் மூலம் தமிழகத்திற்கு மழை பொழிவும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.