பொதுமக்களே அலர்ட்; கொட்ட போகும் மழை - உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

TN Weather Weather
By Thahir May 07, 2023 01:15 PM GMT
Report

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது.

பொதுமக்களே அலர்ட்; கொட்ட போகும் மழை - உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி | A Low Pressure Area Will Develop Tomorrow

வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது, இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 5 நாட்கள் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை, அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.