நடுவானில் திடீரென பறந்த விமான கதவு; அலறிய பயணிகள் - பகீர் வீடியோ!

United States of America Flight
By Sumathi Jan 06, 2024 07:37 AM GMT
Report

 நடுவானில் விமான கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

பறந்த கதவு

அமெரிக்கா, போர்ட்லாண்ட் என்ற இடத்தில் இருந்து கலிபோர்னியாவின் ஆன்டரியோ நகரை நோக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கிளம்பியது. அதில், 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பயணித்தனர்.

போயிங் 737 மேக்ஸ் ரக விமானம்

தொடர்ந்து, விமானம், 16,325 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, திடீரென விமானத்தின் மைய பகுதியில் இருந்த கதவு பெயர்ந்து, பறந்து சென்றது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.

நடுவானில் எகிறிய விமான கூரை; பறந்த பணிப்பெண் - அலறிய பயணிகள், என்ன நடந்தது?

நடுவானில் எகிறிய விமான கூரை; பறந்த பணிப்பெண் - அலறிய பயணிகள், என்ன நடந்தது?

பயணிகள் அலறல்

அதில், சிலர் அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அதன்பின், உடனே விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதனையடுத்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

வீடியோ காட்சிகள்

தற்போது, சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு வர்த்தக பயன்பாட்டுக்கு வந்த இந்த போயிங் ரக விமானம் இதுவரை 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக பிளைட்ராடார் 24 என்ற விமான இயக்க கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.