தோனியின் சுயநலம்? சர்வதேச வீரருக்கு நேர்ந்த கதி - கொதிக்கும் ரசிகர்கள்!

MS Dhoni Chennai Super Kings Cricket Sports IPL 2024
By Jiyath May 04, 2024 07:41 AM GMT
Report

எம்.எஸ்.தோனி ரன் ஓட மறுத்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார். 

எம்.எஸ். தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

தோனியின் சுயநலம்? சர்வதேச வீரருக்கு நேர்ந்த கதி - கொதிக்கும் ரசிகர்கள்! | Irfan Pathan About Ms Dhoni And Darin Michael

இதில் சென்னை அணி விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது கடைசி ஓவரின் 3-வது பந்தை டீப் கவர் திசையில் அடித்து விட்டு எம்.எஸ். தோனி ஓட மறுத்தார்.

அதற்குள் எதிர்முனையில் நின்ற டேரில் மிட்செல், தோனி பக்கம் கிரீசை தொட்டு விட்டு, பிறகு தோனி வேண்டாம் என்றதால் மறுமுனைக்கும் ஓடிவந்து ரன்-அவுட்டில் இருந்து தப்பினார்.

5-வது தடவ அடிக்கிறோம்.. 'தல' தான் காரணம் - CSK-வை கிண்டலடிக்கும் பஞ்சாப்!

5-வது தடவ அடிக்கிறோம்.. 'தல' தான் காரணம் - CSK-வை கிண்டலடிக்கும் பஞ்சாப்!

இர்பான் பதான்

அதாவது தோனி உடனடியாக ஓடியிருந்தால் 2 ரன்கள் கிடைத்திருக்கும். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. மேலும், தோனியின் இந்த செயல் சுயநலமானது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

தோனியின் சுயநலம்? சர்வதேச வீரருக்கு நேர்ந்த கதி - கொதிக்கும் ரசிகர்கள்! | Irfan Pathan About Ms Dhoni And Darin Michael

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார். அவர் கூறுகையில் "அந்த பந்தில் தோனி ரன் எடுக்க மறுத்திருக்கக் கூடாது. கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. அதில் இதுபோன்று செய்யக்கூடாது.

எதிர்முனையில் நின்ற டேரில் மிட்செல் சர்வதேச வீரர். ஒரு வேளை அவர் பவுலராக இருந்திருந்தால் பேட்ஸ்மேனின் நிலைமையை நிச்சயம் என்னால் புரிந்து கொண்டிருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் எம்.எஸ்.தோனி 14 ரன்னில் ரன்-அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.