CSK அணியின் படுமோசமான 2 கேப்டன்கள்; தோனி தான் டாப் - ஏன் தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் பற்றிய தகவல்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூன்று வீரர்கள் கேப்டனாக இருந்துள்ளனர்.
இதில் தோனியை தவிர மற்ற இருவரும் 10 போட்டிகளுக்கு கூட கேப்டனாக செயல்படவில்லை. தோனி சில போட்டிகளில் ஓய்வு எடுத்த போது, 6 போட்டிகளுக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டார்.
கேப்டன் தோனி
அதில் 2 வெற்றிகள், 3 தோல்விகள் மற்றும் ஒரு டை என அவரின் கேப்டன்சி சராசரியாகவே இருந்துள்ளது. அதேபோல் 2022-ம் ஆண்டு தோனி தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்தார்.
அந்த தொடரின் முதல் 8 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக செயல்பட்டார். அப்போது 2 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளை சிஎஸ்கே அணி சந்தித்தது. இதனால் மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
இதுவரை தோனி தலைமையில் 235 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணிக்கு 142 வெற்றிகள், 90 தோல்விகள், ஒரு டை கிடைத்துள்ளன. கேப்டனாக தோனியின் வெற்றி சராசரி 60.42 ஆகும்.
அதேபோல் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவின் வெற்றி சதவீதம் 33.33, ஜடேஜாவின் வெற்றி சதவீதம் 25 சதவீதமாகவும் உள்ளது. இதனால் தான் தோனி நீண்ட காலமாக சிஎஸ்கே அணியின் சிறந்த கேப்டனாக இருந்து வருகிறார்.