உணவு, தங்குமிடமெல்லாம் இலவசம்; கை நிறைய சம்பளம் - ஆனால், அரசு போட்ட ஒரே கண்டிஷன்!

Tourism Ireland
By Sumathi Jan 25, 2024 09:58 AM GMT
Report

தீவு ஒன்று வழங்கும் அசத்தல் ஆஃபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

great blasket island

அயர்லாந்தில் கிரேட் பிளாஸ்கெட் என்ற அழகிய தீவு அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், இங்கு தனிநபர் மற்றும் ஜோடிகளுக்கு பணம் கொடுத்து வாழ வாய்ப்பளிக்கப்படுகிறது.

ireland

அதன்படி, தம்பதிகள் இங்கு வேலைக்காக அழைக்கப்படுகின்றனர். அவர்கள், இந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாக பணி செய்வதில் ஈடுபடுவார்கள். மேலும், இவர்களுக்கு வேலைக்கு உரிய சம்பளம் வழங்கப்படும்.

உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட அதிசய மனிதர்கள் வாழும் இடம் பற்றி தெரியுமா?

உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட அதிசய மனிதர்கள் வாழும் இடம் பற்றி தெரியுமா?

அசத்தல் ஆஃபர் 

அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும். தேவைகள் கவனிக்கப்படும். இந்த பணி இந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தொடரும். விருந்தோம்பலில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆங்கிலத்திலும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

great-blasket-island

விண்ணப்பிப்பவர்களின் வயது 40 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கண்டிஷன் என்னவென்றால் இந்த பணிக்கு வருபவர்களுக்கு ஒரு விடுப்பு கூட கொடுக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.