தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்? ஐஆர்சிடிசி முக்கிய அறிவிப்பு
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய விளக்கத்தை ஐஆர்சிடிசி அளித்துள்ளது.
தட்கல் ரயில் டிக்கெட்
ரயில்களில் உடனடியாக பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தட்கல் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி, குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்வதற்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும்.
நேரம் மாற்றம்?
இந்நிலையில், இந்த தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்,
குளிர்சாதன வசதி அல்லது குளிர்சாதன வசதி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் மாற்றம் எதுவும் முன் மொழியப்படவில்லை என்றும்,
முகவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களும் மாற்றப்படவில்லை என்றும் ஐஆர்சிடிசி விளக்கமளித்துள்ளது.