சேலை கட்டி மோசடியில் ஆண்கள்.. 100 நாள் வேலை திட்டம் - இப்படியெல்லாமா பண்ணுவாங்க..

Government Of India Karnataka Money
By Sumathi Apr 09, 2025 11:00 AM GMT
Report

100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்துள்ளது.

100 நாள் வேலை

கடந்த 2005ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

karnataka

அதன்படி, அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படுகிறது. அதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.370 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதில் கர்நாடகா, மல்தார் கிராமத்தில் சன்னலிங்கப்பா என்பவரின் பண்னை அருகில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக தொழிலாளர்களின் குழு படம், அரசின் என்.எம்.எஸ்., எனும் தேசிய கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

வக்பு வாரிய திருத்த மசோதா; மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும் - பிரதமர் மோடி

வக்பு வாரிய திருத்த மசோதா; மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும் - பிரதமர் மோடி

ஆண்கள் மோசடி

இதுகுறித்து சந்தேகம் எழுந்த நிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், 4 பேர் கொண்ட ஆண்கள் குழு ஒன்று சேலை உடுத்தி தலையை மூடுக்கொண்டு பெண்களை போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆண்கள் குழு ஒன்று சேலை உடுத்தி தலையை மூடுக்கொண்டு பெண்களை போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

100 days work scheme

ரூ.3 லட்சம் வரை ஆண்கள் பலன்களை பெற்றுள்ளனர் தொடர்ந்து பஞ்சாயத்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி கூறுகையில், “இந்த வழக்கில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒரு அவுட்சோர்ஸ் ஊழியர் இதைச் செய்தார்.

முழு மோசடியும் எனக்குத் தெரியாது. இது என் கவனத்திற்கு வந்தபோது, ​​நான் அந்த ஊழியரை இடைநீக்கம் செய்தேன். இப்போது, ​​கிராமத்தில் MGNREGA பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன. நாங்கள் 2,500 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார். ஆண்கள் சேலை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.