தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு அதிரடி தடை - மீறினால் இதுதான் தண்டனை?

Iraq LGBTQ World
By Jiyath Apr 29, 2024 04:44 AM GMT
Report

ஈராக்கில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

தன்பாலின திருமணம்

ஈராக் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம், அந்நாட்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு அதிரடி தடை - மீறினால் இதுதான் தண்டனை? | Iraq New Law Says Same Sex Relationships

இந்த புதிய சட்டம் ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து ஈராக் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது. தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

[

சிறை தண்டனை

அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதேபோல் தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு அதிரடி தடை - மீறினால் இதுதான் தண்டனை? | Iraq New Law Says Same Sex Relationships

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.