இப்படியும் ஒரு சாதனை..ஒட்டல ஆனாலும் கீழ விழல..ஸ்பூனை வைத்து கலக்கும் ஈரான் நபர்!!
உடலில் ஸ்பூனை வைத்து ஈரான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அறிய சாதனை நிகழ்த்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
கின்னஸ் சாதனை
வினோத சாதனைகளை மேற்கொண்டு வரும் பலரையும் குயின்ஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து வருகின்றது. மனிதர்களும் தங்களை பிரபலப்படுத்தி கொள்ள பல்வேறு வினோத முயற்சிகளில் இறங்கி சில சமயங்களில் மக்களை அசத்தியும் வருகின்றார்.
அந்த வரிசையில் தற்போது ஈரான் நாட்டை சேர்ந்த அபோல்பாசல் சபேர் மொக்தாரி ஸ்பூங்களை வைத்து சாதனை ஒன்றை செய்து அசத்தியுள்ளார். ஈரானின் கராஜில் பகுதியை சேர்ந்த அவர், தனது உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, 64 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி முந்தைய சிறந்த கின்னஸ் உலக சாதனையை தற்போது அபோல்பாசல் முறியடித்துள்ளார். இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்நது கொண்ட அவர், "நான் குழந்தையாக இருந்தபோது தற்செயலாக என்னுடைய இந்த திறமையை கவனித்தேன்.
ஆனால் பல வருட பயிற்சி மற்றும் முயற்சிக்குப் பிறகு, எனது திறமையை வலுப்படுத்தி, இப்போது இருக்கும் இடத்திற்கு அதை வளர்த்துக் கொள்ள முடிந்தது," என்று கூறினார். .