சிறையில் உள்ள பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - பகீர் குற்றச்சாட்டு!

Sexual harassment Iran
By Sumathi Dec 26, 2022 05:16 AM GMT
Report

 போராட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறையில் பெண்கள்

ஈரானில், ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதற்கு உலக அளவில் அரசுக்கு கண்டனம் எழுந்தது. இந்தப் போராட்டம் நாட்டையெ உலுக்கியது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சிறையில் உள்ள பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - பகீர் குற்றச்சாட்டு! | Iran Women Protesters Sexually Assaulted In Prison

மேலும், பெண்கள் சிறுவர்கள் என 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் மரண தண்டனையும் வழங்கப்பட்டது. இதனை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்து வருகின்றன.

பாலியல் தொல்லை

இந்நிலையில், போராட்ட வழக்கில் கைதாகி டெஹ்ரானில் உள்ள சிறையில் இருக்கும் மனித உரிமை ஆர்வலரான நர்கீஸ் முகமதி என்கிற பெண் சிறையில் பெண்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் சிறையில் உள்ள பெண்கள் போலீஸ்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் குற்றப் சாட்டியுள்ளார். ஆனால் ஈரான் அரசு அதனை மறுத்துள்ளது.