இளம்பெண் மரணம்.. ஹிஜாப்பை எரித்தும், முடியை வெட்டியும் போராட்டத்தில் பெண்கள்!

Viral Video Iran
By Sumathi Sep 19, 2022 12:20 PM GMT
Report

ஹிஜாப் சர்ச்சையில் இளம்பெண் கொல்லப்பட்டதற்கு, அந்நாட்டு பெண்கள் உள்பட பலரும் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் மரணம்

ஈரானைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினி, போலீஸாரால் ஹிஜாபை முறையாக அணியவில்லை என்பதால் கைதாகியுள்ளார். போலீசார் விசாரணையை அடுத்து நீண்ட நாள்களாக கோமாவில் இருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை (செப். 16) உயிரிழந்தார்.

இளம்பெண் மரணம்.. ஹிஜாப்பை எரித்தும், முடியை வெட்டியும் போராட்டத்தில் பெண்கள்! | Iran Women Cut Hair Burn Hijab To Protest

மாஷா அமினியை போலீசார் கடுமையாக தாக்கியதில்தான் அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை மறுத்துள்ள போலீசார் தரப்பு, கைது செய்யப்பட்டபின்னர் அங்கிருந்த பெண்களுடன் இருந்தபோது,

வலுக்கும் போராட்டம் 

அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 7 வயதில் இருந்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற ஈரானிய சட்டத்தை எதிர்க்கும் விதமாக பெண்கள் தங்களின் தலைமுடியை வெட்டி, ஹிஜாபை பொதுவெளியில் எரித்து வருகின்றனர். இதனை சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பதிவிட்டும் வருகின்றனர்.