FIFA World Cup: அமெரிக்கா வெளிய போகனும் - கடுப்பில் கொந்தளித்த ஈரான்!

Football United States of America Iran FIFA World Cup Qatar 2022
By Sumathi Nov 29, 2022 04:24 AM GMT
Report

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற ஈரான் வலியுறுத்தியுள்ளது.

Allah

ஃபிபா கால்பந்து 2022 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆண்கள் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு ஒன்று போடப்பட்டது. அதில், ஈரான் நாட்டு தேசியக் கொடியின் நடுவே ”Allah" என்பதை குறிப்பிடும் தேசிய சின்னத்தை நீக்கிவிட்டு பதிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FIFA World Cup: அமெரிக்கா வெளிய போகனும் - கடுப்பில் கொந்தளித்த ஈரான்! | Iran Urges Us Kicked Out Of Fifa World Cup 2022

இதற்கு ஈரான் கால்பந்து கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஃபிஃபாவிடம் புகார் அளித்துள்ளது. அமெரிக்க கால்பந்து அணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அணியை நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தேசியகொடி சர்ச்சை

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக அந்த கொடியில் மாற்றம் செய்து உண்மையான கொடியை பதிவிட்டு திருத்திக் கொண்டது. மேலும், ஈரான் பெண்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையிலேயே தேசியக் கொடியில் மாற்றம் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க கால்பந்து அணியின் பயிற்சியாளர் கிரெக் பெர்ஹால்டர், ஈரான் தேசியக் கொடி சர்ச்சை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இதற்காக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இதில் எங்களின் பங்கும் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.