உலகக்கோப்பை கால்பந்து; கனடாவை வெளியேற்றிய குரோஷியா...! சோகத்தில் கனடா ரசிகர்கள்..!
நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து கனடாவை வீழ்த்தி குரோஷியா அபார வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.
உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
கனடாவை வெளியேற்றிய குரோஷியா
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து கனடா, குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி குரோஷியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் 4 கோல் அடித்ததால் F பிரிவில் குரோஷியா முதலிடம் பெற்றுள்ளது. இதனையடுத்து, உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து குரோஷியா, கனடாவை வெளியேற்றியுள்ளது.
இதனையடுத்து, குரோஷியாவிற்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
FT: Croatia 4-1 Canada
— B/R Football (@brfootball) November 27, 2022
CANADA ARE KNOCKED OUT OF THE WORLD CUP ❌ pic.twitter.com/Ie3jo8lPvP
?? | Josip Juranovic
— Everything Celtic (@aboutceltic) November 27, 2022
Congratulations to JJ on a 4-1 victory vs Canada today that puts Croatia top of Group F at the 2022 World Cup.
Juranovic assisted the crucial second goal which notched Croatia in front minutes before the HT whistle ?? pic.twitter.com/4M2ncyDTUP
Canada are eliminated from the 2022 World Cup after losing to Croatia. pic.twitter.com/yYttIByBNL
— ESPN FC (@ESPNFC) November 27, 2022

வருடத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் : பணிக்கு வர மறுக்கும் மருத்துவர்கள் : எங்கு தெரியுமா..! IBC Tamil

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
