மகளே நிறைவேற்றிய தாயின் தூக்கு தண்டனை - ஏன்.. என்ன நடந்தது?
மகளே தாயின் மரண தண்டனையை நிறைவேற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மரண தண்டனை
ஈரானின் சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில், அந்தப் பெண் தூக்கிலிடப்பட்டபோது, அந்த மரண தண்டனையை மகளே தன் கையினால் நிறைவேற்றி வைத்துள்ளார்.

தண்டனையை நிறைவேற்றுவதற்காக, அவரது மகள் தண்டனை கொடுக்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தாயின் காலடியில் போடப்பட்டிருந்த நாற்காலியை மகள் எட்டி உதைத்து, மரண தண்டனையை நிறைவேற்றினார்.
கொலை வழக்கு
மரண தண்டனை வழங்கப்பட்டவர் மரியம் கரிமி. கணவரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெண்ணின் தந்தை இப்ராகிம், தனது மருமகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தீர்க்க பலமுறை முயன்றும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மரியத்தை அவரது கணவர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்ராகிம் தனது மருமகனை கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தந்தையுடன், மரியமும் குற்றம் சாட்டப்பட்டார்.
மகளை வைத்து..
பின்னர் சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் மரியம் மற்றும் அவரது தந்தை இப்ராகிமை கைது செய்தனர். மரியத்தின் 6 வயது சிறுமியை அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமிக்கு யாரும் இல்லாததால், அனாதை என்று கூறப்பட்டது. தற்போது சிறுமிக்கு 19 வயதான நிலையில், அவரது தாய்வழி தாத்தாவும், தாயும் சேர்ந்து, தந்தையைக் கொன்றதாகக் கூறப்பட்டது.
இறந்தவரின் நெருங்கிய உறவினர்களாக சிறுமி இருந்த நிலையில், மகளை வைத்தே மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.