வெள்ளையா இருந்தா இங்க மரண தண்டனை: ஜாரவா பழங்குடியின் விசித்திரபோக்கு!
அந்தமான் தீவுகளில் வசிக்கும் ஜாரவா பழங்குடியினருக்கு வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனையை விதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் நிறைய பழங்குடியின மக்கள் வசித்துவருகிறார்கள். அவர்களில் ஒரு பழங்குடியினரான ஜாரவா மக்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் பசிபிக் தீவை சேர்ந்தவர்கள் என்பதற்கான அம்சங்கள் உள்ளன. இந்த தீவுகள் இந்தியாவில் இருக்கும் போதிலும் அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்ல என சொல்லப்படுகிறது. ’
இவர்களை மண்ணின் மைந்தர்கள் என்றும் அழைக்கிறார்கள். இவர்கள் வித்தியாசமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த இனத்தை சேர்ந்த பெண்களுக்கு கருப்பு நிறத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டுமாம். ஒரு வேளை வெள்ளை நிறத்தில் பிறந்துவிட்டால் அந்த குழந்தையை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என சொல்லப்படுகிறது.
உலகில் வாழும் இந்த இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்களில் எல்லாரும் இதை செய்வதில்லை என்ற ஒரு தகவலும் உள்ளது. அந்தமானில் ஜாரவா பழங்குடியினத்தவர்கள் 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இவர்கள் மொத்தம் 380 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்கள் கற்காலத்தில் வசித்தது போலவே தற்போதும் வசிக்கிறார்கள். இவர்கள் வெளியுலக தொடர்பின்றி வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளையும் மீன்களையும் வேட்டையாடி உண்கிறார்கள். பன்றிகளையும் உண்பார்கள். ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர்கள் கருப்பாக இருப்பார்கள்.
இந்த நிலையில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தையை ஏற்க மறுத்து கொன்றுவிடுகிறார்கள் வெள்ளை நிற குழந்தை தங்கள் இனத்தை சார்ந்தது அல்ல என்றே கருதுகிறார்களாம். அது போல் இந்த சமூகத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு தாய் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தாய்ப்பாலை கொடுப்பார்கள்.
ஜாரவா பழங்குடியினத்தில குழந்தை கருப்பாக பிறக்க வேண்டும் என்பதால் கர்ப்பிணிகளுக்கு விலங்குகளின் ரத்தத்தை குடிப்பதற்கு கொடுப்பார்கள்.
ஆப்பிரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள் அழிவின் விளிம்பை எட்டியுள்ளார்கள என சொல்லலாம்.