ஹிஜாப்: இளம்பெண் இதனால்தான் இறந்தார் - ஈரான் பகீர் அறிவிப்பு!
ஹிஜாப் சர்ச்சையில், மாஹ்ஷா அமினி என்பவர் உடல்நலக்குறைவால் தான் இறந்தார் என ஈரான் அறிவித்துள்ளது.
ஹிஜாப் விவகாரம்
மாஹ்ஷா அமினி ஹிஜாப் சரியாக அணியாததற்காக ஈரானின் ஒழுக்க காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர்கள் கடுமையாக அவரைத் தாக்கியதனால் கோமா நிலைக்கு சென்றார். 3 நாட்கள் கழித்து கடந்த செப்டம்பர் 16ம் தேதி உயிரிழந்தார்.

இதனால், பெண்கள் வீதிகளில் இறங்கி ஹிஜாப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் முடியை வெட்டிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. தங்களது ஹிஜாபை தீயிலிட்டு எரித்து போராடி வருகின்றனர்.
இறப்பின் காரணம்
போராட்ட காலத்தில் பல பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். சிலர் காணாமல் போயிருக்கின்றனர். ஈரான் அரசு பெண்களின் உயிரிழப்புக்கு தாங்களே காரணம் என குடும்பங்கள் பகிரங்கமாக அறிவிக்க அழுத்தம் கொடுத்து வருவதாக மனித உரிமைகள் ஆணையம் Amnesty International கூறியுள்ளது.

இந்நிலையில், மாஹ்ஷா அமினி, அதிகாரிகள் அவரை தாக்கியதனால் உயிரிழக்கவில்லை என்றும் அவர் 8 வயதில் செய்து கொண்ட மூளை கட்டி சிகிச்சை தான் காரணம் என்றும் ஈரானின் தடயவியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.