SRH படு தோல்வி: கதறி அழுத காவ்யா மாறன் - ட்ரெஸ்ஸிங் ரூமில் சொன்ன விஷயங்கள்..?
ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணி வீரர்களை சந்தித்து உத்வேகம் ஊட்டினார்
கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 114 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்து மின்னல் வேக வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக அந்த அணி (2012, 2014, 2024) ஐபிஎல் கோப்பை வென்றது. இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்த ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணியின் தோல்வியை கண்டு கண்ணீர் சிந்தினார்.
காவ்யா மாறன்
ஆனால், அதை மறைத்து சிரித்தபடி அவரது அணியின் வீரர்களை கைதட்டி வரவேற்றார். பின்னர் டிரஸ்ஸிங் ரூமில் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்து அவர்களுக்கு உத்வேகம் ஊட்டினார். அதில் "நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.
அதை உங்களிடம் கூறவே நான் இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள். இன்று எல்லாரும் நம்மைப் பற்றி பேசுகிறார்கள். எல்லா நாளும் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும், நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று தெரிவித்துள்ளார். .