ரசிகர்களின் எதிரொலி; ஐபிஎல் டிக்கெட் விலை குறைப்பு - நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

Chennai Super Kings Gujarat Titans Royal Challengers Bangalore IPL 2024
By Swetha Mar 22, 2024 05:18 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் சென்னை -குஜராத் அணிகளுக்கான போட்டி டிக்கெட் விலையை அந்த அணி நிர்வாகம் குறைந்துள்ளது.

ஐபிஎல் டிக்கெட்

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

ரசிகர்களின் எதிரொலி; ஐபிஎல் டிக்கெட் விலை குறைப்பு - நிர்வாகம் அதிரடி அறிவிப்பு! | Ipl Management Reduced Ticket Prices

முன்னதாக, சிஎஸ்கே -பெங்களூரு அணியின் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்கப்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டின் விலை ரூ.1,700, முதல் அதிகபட்சமாக ரூ,7,500 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஆன்லைனில் விற்பனை தொடங்கிய சில வினாடிகளிலையே அந்த தளம் முடங்கியது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். விரைவில் இந்த தளம் சரியாகும் என்று எதிர் பார்த்த போது, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆரம்பமானது ஐபிஎல் திருவிழா; சென்னை வந்த ஆர்.சி.பி வீரர்கள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆரம்பமானது ஐபிஎல் திருவிழா; சென்னை வந்த ஆர்.சி.பி வீரர்கள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விலை குறைப்பு

மேலும், டிக்கெட்டுகள் அதிக விலைக்கு கள்ளசந்தையில் விற்பனைக்கு வந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். ஒரு போட்டிக்கான டிக்கெட் 15,000 ரூபாய் வரை கொடுக்கும் நிலை உள்ளதாக ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தினர்.

ரசிகர்களின் எதிரொலி; ஐபிஎல் டிக்கெட் விலை குறைப்பு - நிர்வாகம் அதிரடி அறிவிப்பு! | Ipl Management Reduced Ticket Prices

இதன் எதிரொலியாக, சென்னையில் நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை ஆன்லைனில் தொடங்குகிறது.

சிஎஸ்கே, பெங்களுரு போட்டிக்கான ஆன்லைன் விற்பனையில் குளறுபடுகள் நிலவியதை தொடர்ந்து டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

ரசிகர்களின் எதிரொலி; ஐபிஎல் டிக்கெட் விலை குறைப்பு - நிர்வாகம் அதிரடி அறிவிப்பு! | Ipl Management Reduced Ticket Prices

இதனை சரிப்படுத்த, சிஎஸ்கே -குஜராத் அணிகளுக்கு இடையேயான டிக்கெட் விற்பனையில் சிக்கல் இருக்காது எனவும், டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் நாளை தெரியவரும்.