IPL தொடரின் முதல் ஆரஞ்சு கேப் வென்றவர்- ஓய்வு பெரும் மற்றொரு ஆஸ்திரேலியா ஜாம்பவான்..!

Punjab Kings TATA IPL Australia Australia Cricket Team
By Karthick Jan 14, 2024 12:54 PM GMT
Report

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷான் மார்ஷ் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஷான் மார்ஷ்

கிரிக்கெட் போட்டிக்கு பல ஜாம்பவங்களை ஆஸ்திரேலியா அணி வழங்கியுள்ளது. அதில் மிக முக்கிய இடம் பிடிப்பவர் ஷான் மார்ஷ். ஆஸ்திரேலியா அணிக்காக 38 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஷான் மார்ஷ்.

ipl-maiden-orange-cap-winner-shaun-marsh-retires

அவற்றில் ஒருநாள் போட்டிகளில் 2773 ரன்கள் குவித்துள்ளார். 7 சதங்கள், 15 அரை சதங்கள் அடங்கும் அதில் அவரின் சிறந்த ஸ்கோர் 151 ரன்களாகும். தனது முதல் அறிமுக ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 7 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் விளாசி 81 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார் ஷான் மார்ஷ்.

ஆரஞ்சு கேப்

இதுபோக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2265 ரன்கள் விளாசியுள்ளார். இவற்றில் 6 சதமும், 10 அரை சதமும் அடங்கும். பிரபலமான ஆஷஸ் தொடரை கடந்த 2017-18ல் ஆஸ்திரேலியா மீண்டும் வெல்ல முக்கியப் பங்கு ஆற்றியவர் ஷான் மார்ஷ் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

போட்டியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல வீரர் - வைரலாகும் Video!

போட்டியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல வீரர் - வைரலாகும் Video!

அந்த சீசனில், ஏழு இன்னிங்ஸ் விளையாடிய ஷான் மார்ஷ், 445 ரன்கள் 74.16 சராசரியில் எடுத்தார். இது வரை டெஸ்ட் போட்டிகளில் இவரது சிறந்த ஸ்கோர் 182 ரன்களாகும்.

ipl-maiden-orange-cap-winner-shaun-marsh-retires

அத்துடன் ஐபில் தொடரிலும் சிறப்பான பங்களிப்பை ஷான் மார்ஷ் அளித்துள்ளார். 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட முதல் சீசனின் அதிக ரன்களை அடித்த ஆரஞ்ச் கேப்பை வென்றவர் ஷான் மார்ஷ் தான்.

ipl-maiden-orange-cap-winner-shaun-marsh-retires

ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக மட்டும் விளையாடினார். இதுவரை 71 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2477 ரன்கள் ஒரு சதம், 20 அரைசதங்களின் உதவியுடன் அவர் குவித்துள்ளார்.