போட்டியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல வீரர் - வைரலாகும் Video!
போட்டியில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் வந்து மைதானத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக் பேஷ் லீக்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் (BBL) தொடரில், சிட்னி தண்டர் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடுகிறார்.
இந்த தொடரில், சிட்னி தண்டர் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் இடையேயான போட்டி நேற்று எஸ்சிஜி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வார்னர் என்ட்ரி
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் ஹாலிவுட் பட ஹீரோ போல் ஹெலிகாப்டரில் வந்து மைதானத்தில் என்ட்ரி கொடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த தனது சகோதரரின் திருமணத்தில் வார்னர் கலந்துகொண்டுள்ளார். பின்னர் அங்கிருந்து போட்டியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்து இறங்கி மைதானத்தில் கெத்தாக என்ட்ரி கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
David Warner has arrived…#BBL13 pic.twitter.com/P94Um9AxNF
— Nic Savage (@nic_savage1) January 12, 2024