CSK vs GT.. குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் - என்ன காரணம்?
குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை - குஜராத்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
சென்னை சேப்பாக்கத்தில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அபராதம் விதிப்பு
இதன் மூலம் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் தங்களது முதல் போட்டியில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.