ஐபிஎல் ஏல விதியில் மாற்றம் - தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடுவதில் சிக்கலா?
ஐபிஎல் ஏல விதியில் மாற்றம் வர உள்ள நிலையில் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் ஏலம்
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்த விதிகளில் மாற்றம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.
ஏல விதிகளில் மாற்றம்
பொதுவாக முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற விதி இருந்தது.
தற்போது நடக்க உள்ள ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களைதான் தக்க வைக்க முடியும் என்றும் ஆர்டிஎம் முறையை ரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.டி.எம் கார்டு இருந்தால் தங்களுடைய வீரர்களை வேறு எந்த அணியும் தேர்வு செய்தாலும் ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி மீண்டும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே இருந்தது.
தோனி ஆடுவாரா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா ஆகிய நால்வரை எந்த சூழ்நிலையிலும் தக்க வைக்க முடிவு செய்திருந்தது. தற்போது 4 வீரர் தான் என்ற நிலையில் தோனியை அணியில் தக்க வைக்க வேண்டுமெனில் யாரை விடுவது என்ற சிக்கலான நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் உள்ளது.
சமீபத்தில் தோனி அளித்த போட்டியில் ரீட்டென்ஷன் விதிமுறைகளைப் பொறுத்தே தான் தொடர்ந்து விளையாடுவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும், அந்த முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நலனை பொறுத்தே இருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் புதிய விதி உறுதியானால் தோனி இந்த ஐபிஎல் தொடரில் ஆடுவாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.