IPL 2025: விடைபெற்ற ரிக்கி பாண்டிங் - CSK அணியில் களமிறங்கும் ரிஷப் பண்ட்..?
டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து 'ரிஷப் பண்ட்' வெளியேறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ரிக்கி பாண்டிங்
2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனிடையே டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2018-ல் முதல் டெல்லி அணியை வழிநடத்தியும் அவரால் ஒரு சாம்பியன் பட்டத்தைக் கூட வாங்கித் தர இயலவில்லை. மேலும், டெல்லி அணி கடைசி 3 சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.
ரிஷப் பண்ட்
இதனையடுத்து, ரிக்கி பாண்டிங் விடைபெறுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்டும் அணியை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால், இதுதொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியிலிருந்து விலகி ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
