இந்த முறையாவது 'ஈ சாலா கப் நம்தேவா' - கேகேஆர் எதிரான போட்டி நடைபெறுவதில் சிக்கல்

Kolkata Knight Riders Royal Challengers Bangalore Bengaluru Weather IPL 2025
By Sumathi May 17, 2025 08:12 AM GMT
Report

ஆர்.சி.பி - கேகேஆர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

RCB vs KKR 

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,

RCB

தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து போர்ப்பதற்றம் தணிந்ததையடுத்து இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில்

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்!

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்!

 புதிய சிக்கல்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக இன்று 7.30 மணியளவில் பெங்களூருவில் மழை பெய்யலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

அவ்வாறு மழை பெய்யும் பட்சத்தில் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். இதனால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிப்போய் விடும்.