மும்பையை வீழ்த்தியது இப்படித்தான் - RCB கேப்டன் பகிர்ந்த ரகசியம்
மும்பையை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தியது குறித்து ஆர்சிபி கேப்டன் பேசியுள்ளார்.
RCB vs MI
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஆர்சிபி அணி வான்கடே மைதானத்தில் தோற்கடித்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆர் சி பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், இது உண்மையிலே சிறப்பான போட்டியாகும். இது மிகவும் கடினமாக இருந்தது. எங்களுடைய பவுலர்கள் தங்களுடைய தைரியத்தை இன்று காட்டியிருக்கிறார்கள். அதை பார்க்கும் போதே அபாரமாக இருந்தது.
எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே எங்கள் அணியின் பவுலர்களுக்கு தான் இந்த விருதை கொடுக்க வேண்டும். மும்பையில் எந்த அணியையும் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது தடுக்கவே முடியாது. அதுவும் இந்த ஆடுகளத்தில் எங்கள் அணி அதை செய்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது.
ரஜத் பட்டிதார் பேட்டி
எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நல்ல முறையில் தங்களுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். குர்னல் பாண்டியா கடைசி ஓவர் வீசிய விகிதம் பிரமாதமாக இருந்தது. அதை சுலபமாக செய்ய முடியாது. ஆனால் அவர் தன்னுடைய தைரியத்தை காட்டி இருக்கிறார்.
நாங்கள் இந்த போட்டியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். இதன் மூலம் கடைசி ஓவரில் குர்னல் பாண்டியாவை பயன்படுத்தலாம் என்று நாங்கள் நினைத்தோம். இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. பவுன்சும் நன்றாக இருந்தது.
குர்னல் வீசிய ஒரு ஓவர் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதிரடியாக ஆடி விக்கெட் விழுவது குறித்து கவலைப்பட கூடாது என்று நான் விளையாடினேன். லெக் ஸ்பின்னர் டி20 போட்டியில் மிகவும் முக்கியமான பவுலராக மாறி இருக்கிறார்கள். அவர்கள் தான் விக்கெட்டுகளை எடுக்குகிறார்கள்.
இன்று அவர் நன்றாக பந்து வீசினார். நாங்கள் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினோம். மும்பை அணியின் பவுலர்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்த விரும்பினோம். அது இன்று நடந்தது எனத் தெரிவித்துள்ளார்.