ஹர்திக் பாண்டியாவின் மோசமான செயல்கள் - கொதித்த ஆகாஷ் அம்பானி
ஹர்திக் பாண்டியா செய்த சில செயல்கள் ஆகாஷ் அம்பானியை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா செயல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து நீக்கியிருந்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்த திலக் வர்மா பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தார்.
ஆகாஷ் அம்பானி அதிருப்தி
அப்போது ஹர்திக் பாண்டியாவும் களத்திற்கு வந்தார். திலக் வர்மாவை ரிட்டயர் அவுட் ஆகுமாறு கூறினார். திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இரண்டு பேட்ஸ்மேன்களுமே பவுண்டரி அடிக்கவில்லை என்ற நிலையில் ஒருவரை மட்டும் அனுப்புவது சரியானதாக இருக்காது என கருதப்படுகிறது.
பின், 14 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது பாண்டியா ஒரு ரன் ஓட மறுத்தார். அதன் பின் நான்காவது பந்திலும் ஹர்திக் பாண்டியா ஒரு ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் அதை செய்யவில்லை. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதை பார்த்து மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி அதிர்ச்சியில் இருந்தார். தற்போது ஹர்திக் பாண்டியா எடுத்த இரண்டு மோசமான முடிவுகள் கடும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.